fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 16:29

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா இம்மாதம் 16ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றையதினம் கொழும்பு மேலதிக நீதவான் ப்ரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே அவருக்கான விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டது.

சிறைக்கைதிகள் 24 பேர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பான இரசாயன பகுப்பாய்வு அறிக்கை இதுவரை கிடைக்கவில்லையென ரகசிய பொலிஸார் இன்று நீதிமன்றில் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 16:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க