இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் பலி
Related Articles
நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். வாரியபொல – குருநாகல் வீதியின் மஹகெலிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளொன்றும், வேனொன்றும் நேருக்க நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதேவேளை மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின் நாமல்கம பகுதியில் ட்ரெக்டர் வண்டியொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 24 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.