கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கட்டாகாலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் பொதுச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், பாடசாலை வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் கட்டாகாலி மாடுகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், குறித்த பகுதிகளில் தொடர்ந்தும் விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் வாகன சாரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக கால்நடைகளின் உரிமையாளருக்கு அறிவிக்கப்பட்டாலும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் அவர்கள் எடுக்க வில்லை எனவும் பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.