LPL தொடரின் 11வது போட்டி இன்று
Related Articles
லங்கா பிரிமியர் லீக் தொடரின் 11வது போட்டி இன்று இரவு 8.00 மணிக்கு நடைப்பெறவுள்ளது. திஸ்ஸர பெரேரா தலைமையிலான ஜெப்னா ஸ்டேலியன்ஸ் அணியும், எஞ்சலோ மெத்யூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணியும் போட்டியில் மோதவுள்ளன. இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் ஜெப்னா ஸ்டேலியன்ஸ் அணி நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளோடு, தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது. தம்புள்ள வைகிங் அணி 4 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகள், ஒரு தோலிவியோடு 6 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியில் 2ம் இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்திலுள்ள கொழும்பு கிங்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில் 2இல் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வியடைந்து 4 புள்ளிகளை பெற்றுள்ளது. கண்டி டஸ்கர்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்று ஏனைய நான்கு போட்டிகளிலும் தோல்வியிடைந்து 2 புள்ளிகளுடம் நான்காம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. கோல் கிளேடியேட்டர்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பிட்;டடியில் இறுதி இடத்தில் காணப்படுகிறது. இதேவேளை இன்றைய தினம் இடம்பெறும் போட்டியில் ஜப்னா ஸ்டேளியன்ஸ் அணி வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெறும்.