ஒமிக்ரோன் காரணமாக நிரம்புகிறது ICU..
Related Articles
ஒமிக்ரோன் பிறல்வின் பாதிப்பு காரணமாக நாளுக்கு நாள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது. தற்போது நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் நாளாந்தம் அடையாளம் காணப்படுகின்றனர். அதற்கமைய வழமையை விட அதிகளவான நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கு மேலதிகமாக வீடுகளில் சிகிச்சை பெறுபவர்கள் உள்ளனர். அதனையும் தவிர்த்து தொற்று அறிகுறிகள் சரியாக வெளிவராததால் பரிசோதனை செய்துகொள்ளாதவர்களும் உள்ளனர்.
இதனை வைத்து பார்த்தின்ற போது அடையாளம் காணப்படும் நோயாளர்களை விட அதிகளவானோர் நாட்டில் இருக்கலாம் என புலப்படுகின்றது. இவர்களில் ஒரு பிரிவு கடுமையாக நோய்வாய்க்குட்பட்டால் நாம் உயர்ந்தபட்ச முயற்சிகளை மேற்கொண்டாலும் சில சந்தர்ப்பங்களில் அவை எமக்கு வெற்றியளிப்பதில்லை. அதனால் இப்போது மரண எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் ஓரளவு அதிகரித்துள்ளது.