எல்லைப்பகுதியில் இராணுவத்தினரை பணியில் அமர்த்தவுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. வட மற்றும் தென் கொரியாவிற்கு இடையிலான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்னெ விசேட பிரதிநிதிக்குழுவொன்றை அனுப்புவது தொடர்பில் தென்கொரியா விடுத்த கோரிக்கையை நிராகரிப்பதாக வட கொரியா குறிப்பிட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான சமாதான உடன்படிக்கையின் ஒரு பகுதியான கெசோனில் அமைக்கப்பட்டிருந்த தகவல் தொடர்பாடல் அலுவலகத்தை வட கொரியா குண்டு வைத்து தகர்த்தது. குறித்த செயற்பாட்டுக்கு தென் கொரியா கடும் கண்டனங்களை வெளியிட்டு, 24 மணித்தியாலங்களின் பின்னர், மீண்டும் இராணுவத்தினரை பாதுகாப்பு பணிக்கு ஈடுப்படுத்தவுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

எல்லைப்பகுதியில் இராணுவத்தினரை பணியில் அமர்த்தவுள்ளதாக வட கொரியா அறிவிப்பு
படிக்க 0 நிமிடங்கள்