மேலும் நான்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கு செல்வதற்காக அனுமதி : வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
Related Articles
மேலும் நான்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கு செல்வதற்காக அனுமதி வழங்கப்படுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. ரொமேனியா, செக் குடியரசு, ஹொங்கொங் மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காக செல்ல அனுமதி வழங்கப்படும். இதற்காக இலங்கையர்கள் தம்மை பதிவு செய்ய வேண்டும் நான்கு கட்டங்களாக பதிவுகள் மேற்கொள்ளப்படும் குறித்த நான்கு நாடுகளுக்குமான வேலைவாய்ப்புக்கான அறிவித்தல் வெளியிடப்படும் போது பதிவு செய்யப்பட்ட முகவர் நிறுவனங்களுக்கும் அவை வழங்கப்படும்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்காக செல்லும் சபர்களை பதிவு செய்யும் செயற்பாடுகள் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி நிறுத்தப்பட்டன. மீண்டும் மே மாதம் 20 ஆம் திகதி முதல் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.