எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் பிரிவுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் ஊழியர்கள் கொழும்புக்கு வருகை தருவதற்கான ரயில் ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ள முறைக்கு அமையவே ஊழியர்கள் நாளாந்தம் பயனிக்க முடியும்.
அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளின் ஆசனங்கள் உள்ளிட்ட தகவல்களை குறுந்தகவல் ஊடாக தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பயணிகளின் தேவைக்கமைய போக்குவரத்து சேவையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர கிங்ஸ்லி ரனவக்க தெரிவித்துள்ளார். சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைய அது தொடர்பன நடவடிக்கை முன்னெடுக்கபடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
