உலகெங்கும் தற்போது 2 இலட்சத்து 76 ஆயிரத்து 173 கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவினால் 11 ஆயிரத்து 423 பேர் உயிரிழந்துள்ளனர். 91 ஆயிரத்து 952 சுகமடைந்துள்ளனர்.
185 நாடுகளில் கொவிட் 19 பரவியுள்ளது. இதேவேளை உலக சுகாதார ஸ்தாபனம் உலகிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு அபாய எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
டிசம்பர் மாதம் சீனாவில் ஹூபை நகரில் ஆரம்பமான கொவிட் 19 வைரஸ் சீனா எங்கும் பரவியது. தற்போது கடந்த 3 நாட்களில் வெளியிலிருந்து நோயுடன் வந்தோரை தவிர வேறு எந்த நோயாளியும் சீனாவில்இனங்காணப்படவில்லை.நேற்றைய தினம் வெளியிலிருந்து வந்த 41 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதுடன் அங்கு 7 மரணங்கள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை கொவிட் 19 தாக்கம் காரணமாக உயிரிழந்த வூஹான் வைத்தியசாலையின் பணிப்பாளர் லூ சைமின்pன் பூதவுடல்எடுத்துச் செல்லப்பட்ட போது, வாகனத்தின் பின்னர் அவரது மனைவி |ஓடும் காணொளிகளை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன். இவரது மனைவி அவ்வைத்தியசாலையின் தலைமை தாதியாவார். இவ்வைரஸ் தாக்கம் காரணமாக இத்தாலியிலேயே அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 627 மரணங்கள் அங்கு சம்பவித்துள்ளன.
இதேவேளை தற்போது நிலவும் மோசமான சூழ்நிலையில்இத்தாலி மக்கள் தமது மனங்களை தேற்றிக் கொள்வதற்காக அயலவர்களுடன் இணைந்து பாடல்களை பாடுவதை அவதானிக்க முடிகின்றது.
இத்தாலிக்கு அடுத்ததாக ஸ்பெயினிலேயே அதிக மரணங்கள் ஏற்பட்டுள்ளன் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா நோயாளிகள் காணப்படுகின்றன. அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்சின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல்இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த நபர் உப ஜனாதிபதியுடன் இணைந்து செயலாற்றுபவர் என தெரிய வந்துள்ளது.
சிங்கப்பூரில் முதல் முறையாக 2 பேர் மரணமடைந்துள்ளனர். சிங்கப்பூரை சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரும் இந்தோனேசியா பிரஜையொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
