மழையுடனான வானிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் போது சாரதிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலையில் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்குமாறு நெடுஞ்சாலை நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் பி.சி.குணசிங்க வலிறுத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.