மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணியானது 25 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம், இந்திய மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்திய முதல் அணி என்ற சாதனையை நியூசிலாந்து படைத்துள்ளது.
அதேநேரம், இந்தத் தொடரை வென்றதன் மூலம், இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வைட் வோஷ் செய்த முதல் அணி என்ற பெருமையையும் நியூசிலாந்து பெற்றது.
இந்தப் போட்டியில் நியூஸிலாந்து வீரர் அஜாஸ் படேல் இரண்டு இன்னிங்ஸுகளிலும் மொத்தமாக 11 விக்கெட்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.