ஹொங்கொங் சூப்பர் சிக்ஸ் இறுதிப் போட்டியில் இலங்கை அணியானது பாகிஸ்தானை மூன்று விக்கெட்டுகளினால் வீழ்த்தி கிண்ணத்தை வென்றுள்ளது.
ஹொங்கொங்கின், மோங் கோக்கில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 5.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தான் சார்பில் அதிகபடியாக மொஹமட் அக்லாக் 20 பந்துகளில் 48 ஓட்டங்களை பெற்றார்.
இலங்கை சார்பில் பந்து வீச்சில் தனஞ்சய லக்ஷான் மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகியோர் அதிகபடியாக தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
73 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கினை கடந்தது.
இலங்கை சார்பில் அதிகபடியாக சந்துன் வீரக்கொடி 13 பந்துகளில் 34 ஓட்டங்களை எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை ஹொங்கொங் சூப்பர் சிக்ஸ் தொடரில் மூன்றாவது முறையாக சம்பியன் பட்டம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.