முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவின் 23 ஆண்டு அரசியல் பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்கைப் மூலம் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு களுத்துறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அவரது அரசியல் வாழ்க்கையில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட நூல் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது. பெப்பிலியான சுனேத்ராதேவி பிரிவெனாவின் பேராசிரியர் சங்கைக்குரிய மெதகொட அபேதிஸ்ஸ தேரர் அனுசானம் நிகழ்த்தினார். ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் ரோஹித்த குணவர்தனவிற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்குவதில் ரோஹித்த அபேகுணவர்தன பெரும் பங்கு வகித்தார் என தெரிவித்தார்.
