முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய அரசியல் கட்சியை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. புறக்கோட்டையில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.
நவலங்கா சுதந்திர கட்சியென புதிய கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது. சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவின் ஆசிர்வாதத்துடன் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. கட்சியின் கொள்கை பிரகடனம் அதன் செயலாளர் திலக் வராகொடவினால் கட்சித்தலைவர் குமார வெல்கமவிற்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
