நாட்டில் மீன் துறைமுகங்கள் ஊடாக கொரோனா வைரஸ் நுழைவதற்கான காரணிகளை இனங்கண்டு அவற்றை மூடிவிடுவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் நிஷாந்த பெரேரா தெரிவித்துள்ளார். சிலாம் மாதம்பை பகுதியில்இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் தொடர்பாக முழு உலகமும் அவதானம் செலுத்தியுள்ளது. எவ்வாறாயினும் உயிரிழப்பு சீ’னாவிலிருந்து மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளதுடன் வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்களின் எண்ணிக்கை சுமார் 6 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் 17 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளத.
இவ்வைரஸ் துரிதமாக பரவுவதன் காரணமாக மூடப்பட்டுள்ள உஹான் நகரிலுள்ள அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அந்நாடுகள் ஆரம்பித்துள்ளன. சீனாவிற்கு மேலதிகமாக கூடுதலான நோயாளர்கள் தாய்லாந்திலிருந்து அறிவிக்கப்படுகின்றது. ஏனைய நாடுகளில் 80 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இதில் அடங்குகின்றன.கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த கூடிய ஒளடதம் ஷெங்காய் தேசிய விஞ்ஞான ஆய்வு கூடத்திலிருந்து பரிசிலிக்கப்பட்டது.
