அமெரிக்க இராஜாங்க செயலாளர் சவுதி அரேபியாவுக்கு விஜயம்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் சவுதி அரேபியாவுக்கு விஜயம் 0

🕔15:33, 20.செப் 2019

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ சவுதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ளார். சவுதி அரேபியாவின் இரண்டு எண்ணெய் களஞ்சியசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து அவர் இவ்விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளமை விசேட அம்சமாகுமென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலுக்கு பின்னர் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து சவுதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்க

Read Full Article
கிம் ஜோங் உன்னை சந்திக்கவுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு

கிம் ஜோங் உன்னை சந்திக்கவுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு 0

🕔14:57, 14.செப் 2019

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இவ்வருட இறுதிக்குள் சந்திப்பு இடம்பெறுமென வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. அணுவாயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தும் நோக்கில் இரு தலைவர்களுக்குமிடையில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் இவை தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
அமெரிக்காவிடமிருந்து ஏவுகணை கட்டமைப்பை கொள்வனவு செய்வது தொடர்பில் துருக்கி பேச்சுவார்த்தை

அமெரிக்காவிடமிருந்து ஏவுகணை கட்டமைப்பை கொள்வனவு செய்வது தொடர்பில் துருக்கி பேச்சுவார்த்தை 0

🕔14:40, 14.செப் 2019

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட செய்யப்பட்ட ஏவுகணை கட்டமைப்பை கொள்வனவு செய்வது தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையுப் எர்டோகன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வின்போது இருதரப்பிற்கிடையிலான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏவுகணை கட்டமைப்பு தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப்புடன் இரு வாரங்களுக்கு முன்னர் தொலைபேசி மூலம் கலந்துரையாடியதாகவும் துருக்கி ஜனாதிபதி

Read Full Article
சில அமைப்புக்களுக்கு அமெரிக்கா புதிய தடைகளை விதிக்க நடவடிக்கை

சில அமைப்புக்களுக்கு அமெரிக்கா புதிய தடைகளை விதிக்க நடவடிக்கை 0

🕔14:35, 11.செப் 2019

சில அமைப்புக்களுக்கு அமெரிக்கா புதிய தடைகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஹமாஸ் அமைப்பு மற்றும் ஈரான் புரட்சிகர இராணுவம் என்பனவும் இதில் உள்ளடங்குகின்றன. ISIS பயங்கரவாத அமைப்புக்கு தடைகளை விதிக்க அமெரிக்கா தீர்மானித்தது. அதில் 15 பேருக்கு எதிராகவும் தடைகள் அமுல்ப்படுத்தப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 2001ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அமெரிக்கா மீது மேற்கொள்ளப்பட்ட

Read Full Article
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம் 0

🕔11:44, 11.செப் 2019

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனை பதவியிலிருந்து நீக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அடுத்த வாரத்திலிருந்து புதிய பாதுகாப்பு ஆலோசகர் நியமிக்கப்படவுள்ளார்.

Read Full Article
ஈரான் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரென அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

ஈரான் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரென அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔13:16, 10.செப் 2019

ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். தற்போது நிலவுகின்ற மோதல் நிலைமைகள் குறித்து விசேட கவனம் செலுத்தியே இதனை அறிவிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அணுவாயுத வேலைத்திட்டங்களை அதிகரிக்க ஈரான் தீர்மானித்துள்ளது. இதனால் அவர்களுக்கு எதிரான தடைகளை மேலும் அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

Read Full Article
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான பதற்றநிலை தணிந்துள்ளது :  ட்ரம்ப்

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான பதற்றநிலை தணிந்துள்ளது : ட்ரம்ப் 0

🕔13:06, 10.செப் 2019

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான பதற்றநிலை தணிந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரம் காரணமாக இரு நாடுகளுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இரு நாடுகளும் விரும்பினால் தான் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
டோரியான் அமெரிக்காவின் கிழக்கு கரையோரத்தை ஊடுறுவும் அச்சுறுத்தல்

டோரியான் அமெரிக்காவின் கிழக்கு கரையோரத்தை ஊடுறுவும் அச்சுறுத்தல் 0

🕔14:40, 5.செப் 2019

டோரியான் சூறாவளி அமெரிக்காவின் கிழக்கு கரையோரத்தை ஊடுறுவும் அச்சுறுத்தல் காணப்படுவதாக வளிமண்டலவியல் பிரிவு எச்சரித்துள்ளது. புளோரிடா மாநிலத்திலிருந்து வேர்ஜீனியா வரையிலான கரையோர பகுதிகளிலுள்ள பொது மக்களுக்கு அவசர ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டோரியன் சூறாவளியானது கெருபியன் பஹாமாஸ் தீவில் அண்மையில் ஊடுருவியதை தொடர்ந்து அங்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டன. கடுமையான காற்றுடன் பெய்த

Read Full Article
ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை அதிகரிக்க அமெரிக்கா திட்டம் 0

🕔14:53, 4.செப் 2019

ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை அதிகரிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அவர்களின் விண்வெளி திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அது அமைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரானின் மூன்று நிறுவனங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதில் விண்வெளி ஆய்வு மத்திய நிலையமும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது. பெலஸ்டிக் ஏவுகணை பரிசோதனைக்கென குறித்த நிறுவனத்தை பயன்படுத்த இடமளிக்கப்படாதென அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது

Read Full Article
டொரியன் சூறாவளி காரணமாக பஹாமாஸ் நாட்டில் ஐவர் பலி

டொரியன் சூறாவளி காரணமாக பஹாமாஸ் நாட்டில் ஐவர் பலி 0

🕔11:36, 3.செப் 2019

டொரியன் சூறாவளி காரணமாக பஹாமாஸ் நாட்டில் ஐவர் பலியாகியுள்ளனர். அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியிலுள்ள எபோக்கோ தீவும் சூறாவளியினால் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. சுமார் 13 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக நிவாரண குழு தெரிவித்துள்ளது. அட்லாண்டிக் வலயத்தில் மிகப்பெரிய சூறாவளியாக டொரியன் சூறாவளி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்வதால் ஏற்படுள்ள வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு

Read Full Article

Default