fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ட்ரம்ப் – பைடன் ஆகியோருக்கு இடையில் பரபரப்பு விவாதம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2020 12:37

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் பிரதான இரு வேட்பாளர்களான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோருக்கு இடையிலான முதலாவது உரையாடல் நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்று பரவல், உச்சநீதிமன்றத்தின் வெற்றிடங்களை நிரப்புதல், கறுப்பு இனத்தவர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி, மற்றும் சுகாதார கட்டமைப்பு குறித்து இருவரும் தர்க்கம் புரிந்ததை நேரடி ஒளிபரப்பின் ஊடாக காணக்கிடைத்து. ஜனாதிபதி ட்ரம்ப், ஜோ பைடனுக்கு கருத்துக்களை தெரிவிக்க தொடர்ச்சியாக தடை ஏற்படுத்தியதுடன் இந்நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் இதனால் பெரும் அசௌகரியங்களுக்கு உட்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.

விவாததத்திற்கு இடையில் ஜோ பைடனினால் ஜனாதிபதிக்கு அமைதியாக இருக்குமாறு அச்சுறுத்தியதையும் நேரடியாக உலகம் பூராகவும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்கள் அறிந்துகொண்டனர். எவ்வாறாயினும் இவ்விரு வேட்பாளர்களுக்கும் இடையில் மேலும் இரண்டு நேரடி விவாதங்கள் நவம்பர் 3 ம் திகதிக்கு முன்னர் நடைபெறவுள்ளதாகவும் இவ்விவாதத்தின் வெற்றியாளர் யார் என்பது பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2020 12:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க