ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியிருந்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், அதில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) உத்தியோகபூர்வமாக மறுப்புத் தெரிவித்துள்ளது.
‘2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் பல்வேறு வெளிநபர்கள் 3,089 பேர் தங்கியிருந்தனர்’ என சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்தச் செய்தி தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, குறித்த செய்தி முற்றிலும் பொய்யானது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் தவறானவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகை வளாகங்களுக்குள் அமைந்துள்ள ஏனைய கட்டிடங்களில், பின்வருவோர் மட்டுமே தமது உத்தியோகபூர்வ கடமைகள் மற்றும் தேவைகளுக்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கியிருந்துள்ளனர்:
பாதுகாப்புப் பிரிவினர்
ஊடகவியலாளர்கள்
அரச நிறுவனங்களின் அதிகாரிகள்
இருப்பினும், இந்த அதிகாரிகளோ அல்லது வேறு எந்த நபர்களோ ஜனாதிபதி மாளிகைகளின் முதன்மைக் கட்டிடங்களை தங்குவதற்காகப் பயன்படுத்தவில்லை என்றும், வளாகத்திலுள்ள ஏனைய உத்தியோகபூர்வ கட்டிடங்களையே பயன்படுத்தினர் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
