தன்னைக் கைது செய்வதையும் தடுத்து வைப்பதையும் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனைகள் இன்று (23) இடம்பெறவுள்ளன.
இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
கடந்த 09 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் 4 ஆவது நாளாகவும் பரிசீலிக்கப்பட்ட இம் மனு மீதான மேலதிக விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
