எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்குப் பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு தொடர்பில் நீண்ட நேரம் ஆராய்ந்த பின்னரே நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை வழங்கியுள்ளது.
இவ்வாண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினாலேயே பரீட்சையை பிற்போடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
