ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புக்களை வழங்கும் வேலைத்திட்ட விண்ணப்ப திகதி நிறைவு : 26ம் திகதி முதல் நேர்முக பரீட்சை
Related Articles
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புக்களை வழங்கும் வேலைத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது. நேற்றைய தினம் வரை கிராம சேவகர்களினூடாக அதிகளவான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விண்ணப்பங்களை பிரதேச செயலாளர்களினூடாக எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னர் சரியாக ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொழிலுக்கு தகுதிப்பெறும் நபர்களுக்கு எதிர்வரும் 26ம் திகதி முதல் 5 நாட்களில் அந்தந்த பிரதேச செயலக காரியாலயங்களில் அல்லது பெயரிடப்படும் இடங்களில் நேர்முக பரீட்சை இடம்பெறும். அதில் தெரிவுசெய்யப்படுகின்றவர்களுக்கு அடுத்த மாதம் 2ம் திகதி முதல் தொழில் பயிற்சி வழங்கப்படுமென அமைச்சின் செயலாளர் கே.ஜி.தர்மதிலக்க தெரிவித்துள்ளார்.
பயிற்சி காலத்தில் அவர்களுக்கு 20 ஆயிரத்து 500 ரூபா சம்பளம் வழங்கப்படும். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அவர்கள் நிரந்தர தொழிலில் இணைக்கப்படுவார்களென பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.