ஹொரணை, மல்வானேகம பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் போருவதண்ட பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அயல் வீட்டாருடன் நீண்டகாலமாக நிலவி வந்த தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தகராறு முற்றிய நிலையில், சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் குறித்த நபரைத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை ஹொரணை பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
தற்போது உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
