எதிர்வரும் 21 ம் திகதி முதல் பயணத்தடை விதிக்கப்பட்டதின் பின்னர் விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திகளை நுகர்வோருக்கு எடுத்துச் செல்லும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
பயணத் தடை விதிக்கப்படும் எதிர்வரும் 21 ம் திகதிமுதல் 25 ம் திகதி அதிகாலை 4 மணி வரை அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் மூடிவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25 ம் திகதி அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இரவு 11 மணி வரை திறந்திருக்கும் மீண்டும் அன்றிரவு 11 மணி முதல் 28 ம் திகதி அதிகாலை 4 மணி வரை பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பபட்டிருக்கும்.
மேல் மாகாணத்திற்கு வெளியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்கு தேவையான பொருட்களை வழங்கும் பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் சசேந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.