ஏற்றுமதி விவசாயப் பயிர் கொத்து கிராமத் திட்டத்தின் கீழ் காலி மாவட்டத்தில் 12 கொத்து கிராமங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக காலி மாவட்ட விவசாயக் குழுக்கூட்டத்தில் தெரியவந்துள்ளது.
காலி மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் அண்மையில் (19) காலி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தினால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஒரு கொத்து கிராமத்திற்காக சாகுபடி மாதிரிகள், வாசனைத் திரவியத் தோட்டங்கள், வாசனைத் திரவியங்கள் பதப்படுத்தும் மையங்கள், வாசனைத் திரவிய விற்பனை நிலையங்கள் எனப் பல பிரிவுகளின் கீழ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
காலி மாவட்டத்தின் விரிவாக்கல் உத்தியோகத்தர் பிரிவுகளான நாகொட, பத்தேகம, நியாகம, பலபிட்டிய, எத்கந்துர, எல்பிட்டிய, நெலுவ, தவலம, கரன்தெனிய, ஹபராதுவ, யக்கலமுல்ல மற்றும் அக்மீமன ஆகிய பகுதிகளில் இந்தக் கொத்து கிராமங்கள் நிறுவப்படவுள்ளன.
