fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீன மக்கள் குடியரசு தோற்றுவிக்கப்பட்டதன் 70 வது ஆண்டு விழா இன்று

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2019 13:25

சீன மக்கள் குடியரசு தோற்றுவிக்கப்பட்டதன் 70 வது ஆண்டு விழா இன்று

சீன மக்கள் குடியரசு தோற்றுவிக்கப்பட்டதன் 70 வது ஆண்டு விழா இன்று அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. யுத்தம் காரணமாக பொருளாதார பின்னடைவுக்குட்பட்டிருந்த நாடான சீனா தற்போது உலகில் பலம் பொருந்திய பொருளாதாரத்திற்கு உரிமை கோரும் நாடாக மாறியுள்ளது. பல தசாப்தங்கள் இல்லாத அளவிற்கு பெரும்மளவு கொண்டாட்டங்கள் சீனாவில் திட்டமிடப்பட்டுள்ளன. பிரதான கொண்டாட்டம் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறுகின்றது.

நவீன தொழில்நுட்ப ஆயுதங்களை வெளிக்காட்டும் விதமாக பிரமாண்டமான இராணுவ அணி வகுப்பு மரியாதையும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 15 ஆயிரத்திற்கும் கூடுதலான இராணுவத்தினர் இதில் கலந்து கொள்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சேர்மன் மா சேதுங்கிற்கு பின்னர் மிகவம் அதிகாரம் பொருந்தியவராக கருதப்படுகின்ற தற்போதை சீன அதிபர் ஜீ சிங் பிங் நாட்டு மக்களுக்காக உரையாற்றவுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2019 13:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க