கதிர்காம புனித தலத்தின் பெரஹெராவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க 1,050 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்காக 5 பொலிஸ் கண்காணிப்பாளர்களும் 3 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரஹெராவை பார்வையிட வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்க இராணுவ அதிகாரிகளின் உதவியைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கதிர்காமம் புனித தலத்தின் வருடாந்திர பெரஹெரா இன்று முதல் ஜூலை 10 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
