பாராளுமன்றம் நாளை கூடவுள்ளது. சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற விவகாரம் தொடர்பிலான செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய நாளை காலை 9.30க்கு பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகும். உற்பத்தி வரிச் சட்டத்தின் கீழான விடயங்கள் விவாதிக்கப்படவுள்ளன. நாளை மறுதினம் மற்றும் 22, 23ம் திகதிகளிலும் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
