லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத காரணத்தினால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில், சற்று முன்னர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை ஈட்டியமை தொடர்பாக இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
