12 ரூபாவினால் ஒரு லீற்றர் டீசலின் விலை குறைவடைந்த போதிலும் பஸ் கட்டண மறுசீரமைப்பு இடம்பெறமாட்டாதென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணத்தில் எரிபொருள் விலை மாத்திரம் செல்வாக்கு செலுத்துவதில்லை. இதர செலவுகளும் அதிகரித்துள்ளன.
இதனால் பஸ் கட்டண மறுசீரமைப்பை மேற்கொள்ள டீசலின் விலை 25 – 30 ரூபாவிற்கிடையில் குறைக்கப்பட வேண்டுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
