கொழும்பு பங்குச் சந்தையில் இன்று சந்தை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே பெரும் வீழ்ச்சி பதிவானது.
பிரதான பங்கு விலைச் சுட்டெண்ணான அனைத்து பங்கு விலைச்சுட்டெண், 639.01 புள்ளிகள் அல்லது 4.16 சதவீதம் சரிவடைந்தது.
அதேநேரம் எஸ்.எண்ட்.பி. 20 சுட்டெண் 240.45 புள்ளிகள் அல்லது 5.3 சதவீதம் சரிவடைந்தது.
இதனை அடுத்து பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.
