போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹெட்டன் மற்றும் வட்டவலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஒன்றிணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
அதற்கமைய கேரள கஞ்சா உருண்டைகள், ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் 25 முதல் 38 வயதுக்கு இடைப்பட்டவர்களென தெரியவந்துள்ளது. அவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.