புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வழக்கு ஒன்றுக்கு ஆஜராகாத நிலையில் இருந்த குறித்த அவரை உடன் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும், மாவட்ட நீதவானுமான அயோனா விமலரத்ன கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் வைத்து திறந்த பிடியாணை ஒன்றை கடந்த 8 ஆம் திகதி பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று காலை கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து அவர் புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படடார். அவரை இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவித்து புத்தளம் நீதவான் உத்தரவிட்டார்.
