இலங்கையிலுள்ள இஸ்ரேலர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிளில் குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அருகம்பே தாக்குதல் திட்டம் தொடர்பில் இலங்கை பாதுகாப்பு பிரிவினருக்கு இந்திய புலனாய்வு பிரிவு தகவல் வழங்கியிருந்தது. அருகம்பே பிரதேசத்திலுள்ள இஸ்ரேல் நாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வ பிரிவு இலங்கை பாதுகாப்பு பிரிவிற்கு தகவல் வழங்கியிருந்தது.
தாக்குதல் நடத்த இருவர் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் ஈராக்கிலிருந்து இலங்கைக்கு வந்தவர் எனவும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
