பல கோடி ரூபாவை மோசடி செய்துள்ளதாக கூறப்படும் ஒன்மெக்ஸ் டீ.டி சட்டவிரோத பிரமிட் நிதி நிறுவனத்தின் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கும் வரை காத்திருக்காது, உடனடியாக விசாரணைகளை நிறைவு செய்து சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்றைய தினம் இரகசிய பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணைகளுக்கு எடுக்கப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதேவேளை குறித்த நிறுவனத்தின் இரண்டாம் தரப்பு பிரதிநிதியாக செயற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் அவரை நவம்பர் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
