மாற்றமடையாத சுற்றுலா கொள்கையொன்றை விரைவில் முன்வைக்க நடவடிக்கை
Related Articles
அரசாங்கம் அல்லது அரசியல்வாதிகள் மாறினாலும் மாற்றமடையாத சுற்றுலா கொள்கையொன்றை விரைவில் முன்வைக்கவுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை நிபுணர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வுகளின் பின்னர் தயாரிக்கப்பட்ட இந்த கொள்கையானது தற்போது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அதன் செயற்பாடுகள் தொடர்பில் தௌிவுபடுத்தப்படும். நாட்டில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துள்ள இடங்களில் காணப்படும் நெரிசலைக் குறைக்க விரைவில் செயற்றிட்டமொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முகங்கொடுக்கும் பல்வேறு மோசடிகளைத் தவிர்ப்பதற்கு முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.