நாட்டிலுள்ள 90 வீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை என இலங்கை உயிர்காக்கும் சங்கம் (SLLSA) தெரிவித்துள்ளது.
பெரும்பாலான மீனவர்களுக்கு தங்களுக்கு நீந்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக SLLSA பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார தெரிவித்தார்,
அனர்த்த முகாமைத்துவ மையம் மூலம் நாடு முழுவதும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீனவர்களுக்கு இருக்கும் நீச்சல் திறன் கடலில் உயிரைக் காப்பாற்ற போதுமானதாக இல்லை.
ஒரு நீச்சல் வீரர் 10 நிமிடங்களில் அமைதியான நீரில் குறைந்தது 200 மீட்டர் தொடர்ந்து நீந்தக்கூடிய திறன் பெற்றிருக்க வேண்டும். சர்வதேச அளவுகோல்களின்படி, உயிரைக் காப்பாற்றுபவர் ஒருவரைக் காப்பாற்ற ஆறு நிமிடங்களில் 200 மீட்டர் நீந்தக்கூடிய திறன் பெற்றிருக்க வேண்டும். கடல் போன்ற வேகமான நீரில், ஒரு நீச்சல் வீரர் 400 மீட்டர்களை ஒன்பது நிமிடங்களில் நீந்த வேண்டும், மேலும் ஒரு உயிர்காப்பவர் அமைதியான நீரில் நீந்த குறைந்தபட்சம் ஆறு நிமிடங்கள் எடுக்க வேண்டும் என்பது உடற்பயிற்சி தரநிலை.
இலங்கையில் தினமும் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் பதிவுகள் தெரிவிக்கின்றன.
மீனவர்கள் தங்கள் உயிர்காக்கும் ஜாக்கெட்டுகளை (தனிப்பட்ட மிதக்கும் சாதனங்கள் அல்லது PFDகள்) அணிவதில்லை என்றும் நாணயக்கார குறிப்பிட்டார்.
“அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் PFD வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படவில்லை, ஆனால் அவை உயிரைக் காப்பாற்ற உதவும். அனர்த்த முகாமைத்துவ மையம் வழங்கும் லைஃப் ஜாக்கெட்டுகள் தரமானவை. ஆனால் மீனவர்கள் யாரும் PFD களைப் பயன்படுத்துவதில்லை. அவர்கள் கடலில் எந்த நீர் நிலையிலும் நீந்தலாம் என்பதால் அந்த ஜாக்கெட்டுகள் தங்களுக்குத் தேவையில்லை என அவர்கள் கருதுகின்றனர்,”
மீனவர்கள் கடல், ஆறு அல்லது ஏரிகளில் மீன்பிடிக்கும்போது PFD அணிய வேண்டும் எனவும் ஒரே குறிப்பிட்டார்.
