அத்தனகல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் பிரதி அதிபர் ஒருவர், பாடசாலை மாணவி ஒருவருக்கு ஆபாசமான புகைப்படங்களை அனுப்பிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில், இதுபோன்ற புகைப்படங்கள் சம்பந்தப்பட்ட மாணவிக்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து அனுப்பப்பட்டது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் துணை அதிபரை, மேலதிக வகுப்பொன்றை நடத்தி வந்த நிலையில் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் ஏற்கனவே 11ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு இதுபோன்ற ஆபாச புகைப்படங்களை அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது.
