சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தாக்கத்து இலக்காகி பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 65 ஆயிரத்தை கடந்துள்ளது. 38 லட்சத்து 20 ஆயிரத்து 703 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோன வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை இத்தாலி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தடுப்பூசி எலிக்கு செலுத்தப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிப்பில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த தடுப்பூசியை கோடை காலத்தில் மனிதர்களுக்கு செலுத்தும் முழுமையான ஆராய்ச்சி தொடங்குமென குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை தடுப்பூசியை உருவாக்கும் செயற்திட்டத்தை துரிதமாக முன்னெடுக்க சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியமென இத்தாலி தெரிவித்துள்ளது.