இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பக் (Bonnie Horbach) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் அவர்களை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்திருந்தார்.
இச்சந்திப்பின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் நெதர்லாந்து தூதுவருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது. இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள் மேம்படுத்துத்தல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
