மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கும் வேலைத்திட்டத்தை அடுத்த மாதம் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
இதற்கென உடனடி பயன்பாட்டிற்கு ஒரு சில கொரோனா தடுப்பூசிகளை அங்கீகரிக்க இந்திய சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 2 கம்பனிகள் தற்போது இதற்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. மேலும் 6 தடுப்பூசிகள் பரிசீலனை நடவடிக்கைகள் காணப்படுகின்றன.
அடுத்த மாதம் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை வழங்கும் வேலைத்திட்டத்தின் மூலம் ஆகஸ்ட் மாதமளவில் 300 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒருகோடியை அண்மித்துள்ளது. மொத்த கொரோன மரணங்களின் எண்ணிக்கையும் ஒரு இலட்சத்து 44 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
