நாட்டில் கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்குள்ளான கர்ப்பிணி தாய்மார்களின் எண்ணிக்கை கடந்த 2 வாரங்களில் அதிகரித்துள்ளதாக மகப்பேற்று மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பான மருத்துவ நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார். கர்ப்பிணிப்பெண்கள் சன நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும், உரிய சுகாதார வழிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள் தாய் சேய் சிகிச்சை நிலையங்களுக்கு உரிய தினத்தில் சென்று தமக்கான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் வைத்திய நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணி தாய்மாரிடையே தொற்று அதிகரிப்பு..
படிக்க 0 நிமிடங்கள்