fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொடிக்காவத்தை பகுதியில் 10 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 17, 2020 13:00

கொடிக்காவத்தை பகுதியில் 10 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு

கொடிக்காவத்தை பகுதியில் 10 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. தடுத்து வைத்து விசாரணை நடத்தப்படும் பாதாள உலகக்குழு தலைவரான மாக்கந்துரே மதூஷ் வழங்கிய தகவலுக்கமையவே போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மாக்கந்துரே மதூஷ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் மேலதிக விசாரணைகளுக்காக நேற்றைய தினம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் மாக்கந்துரே மதூஷிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து கொடிக்காவத்தை பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 10 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 17, 2020 13:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க