முன்னேற்றகரமான நவீன தொழில்நுட்பத்துடன் கருத்து சுதந்திரத்திறகான பின்னணி நிச்சயம் உருவாக்கப்படுமென ஊடக துறை அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒளிபரப்பினை டிஜிட்டல்மயப்படுத்தும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். தெளிவான காட்சிஅமைப்புடன் தொலைக்காட்சியை கண்டுகளிப்பதற்கான வாய்ப்புகள் இதன் ஊடாக இலங்கை தொலைக்காட்சி இரசிகர்களுக்கு உருவாக்கப்படுகின்றது.
இலங்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பிலான கருத்தாடல்கள் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் 2005 ஆம் ஆண்டு முதல் தடவையாக இடம்பெற்றது. தொலைக்காட்சி ஒளிபர்ப்பினை டிஜிட்டல்மயப்படுத்தும் திட்டத்தின் உத்தியோகபூர்வ வைபவம், ஊடக துறை அமைச்சர் டலஸ் அலகப்பெருமவின் தலைமையில் நேற்று மாலை கொழும்பில் நடைபெற்றது. இதன்போது, தொலைக்காட்சி ஒளிபரப்பினை டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டத்தை மக்கள் மயப்படுத்தும் வர்த்தக நாமமும் வெளியிடப்பட்டது. அமைச்சர்களான டலஸ் அலகப்பெரும, கலாநிதி பந்துல குணவர்தன, கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் தலைமையில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் உட்பட முன்னாள் ஊடக துறை அமைச்சர்களும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்திருந்தனர்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/lVVUX1b_n5c”]
