தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபைக்கு சொந்தமான கணனி தரவுகளஞ்சியத்தை அழித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, களஞ்சியசாலையை முன்னெடுத்து சென்ற நிறுவனத்தின் பொறியியலாளர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்து உத்தரவிட்டது. 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளில் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வெளிநாடு செல்லவும் தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
