அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் மரணங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவின் ஆயிரத்து 480 மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் இந்தியாவிலும் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் முறையான அதிகரிப்பு ஏற்படுவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்றைய தினம் இந்தியாவில் 16 ஆயிரம் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அந்நாட்டில் பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 40 இலட்சத்தை கடந்துள்ளது. இதேவேளை உலகளவில் 221 நாடுகளில் 23 கோடியே 94 இலட்சத்து 81 ஆயிரத்திற்கும் அதிக கொவிட் தொற்றளார்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
