புகழ்பெற்ற கலைஞர் சரத்சந்திர ஸ்ரீ தனது 57 வது வயதில் இன்று காலமானார். 1964 ம் ஆண்டு பிறந்த சரத் சந்திரஸ்ரீ வேகட பௌத்தாலோக வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியைப் பயின்றார். புகழ்பெற்ற கலைஞரான இவர் சின்னத்திரையில் தமது திறமைகளை வெளிக்காட்டி மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளார். அத்துடன் மேடை நாடகங்களிலும் அவர் தனது திறமைகளை வெளிக்கொணர்ந்தார். தூதருவோ, மலி, கேத்துமதி, பபா போன்ற தொலைக்காட்சி நாடகங்களிலும் நடத்து புகழ்பெற்றார். சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பபா தொலைக்காட்சி நாடக்தில் சமகிபுர வசந்த எனும் பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் உள்ளங்களில் நீங்காத பதிவை நிலைநாட்டினார். ராஜ்யசேவய பினிஷை திரைப்படம் ஊடாக தமது ஆற்றலை வெளிக்காட்டிய சரத் சந்திரஸ்ரீ பல்வேறு திரைப்படங்களில் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார். சிறு காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் தனது 57 வது வயதில் காலமானார்.

புகழ்பெற்ற கலைஞர் சரத்சந்திர ஸ்ரீ தனது 57வது வயதில் இன்று காலமானார்.
படிக்க 1 நிமிடங்கள்