கொழும்பு நகரில் அதிகரித்துள்ள வாகன நெரிசலுக்கு தீர்வாக, அறிமுகப்படுத்தப்பட்ட பார்க் என்ட் ரைட் சிட்டி பஸ் சேவையை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சில வாரங்களில் பிலியந்தலை 120 பஸ் மார்க்கத்தினூடாகவும், காலி வீதி மொரட்டுவ – கொழும்பு பஸ் மார்க்கத்தினூடாகவும், நாட்டின் மேலும் சில பிரதான நகரங்களினூடாகவும் பார்க் என்ட் ரைட் சிட்டி பஸ்சேவையை விரிவுபடுத்த போக்குவரத்து இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது.
கடந்த ஜனவரி 15ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த சேவை தற்போது கொட்டாவ மாகும்புற பல்லின போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து 138, 174, 112 மற்றும் 115 ஆகிய பஸ் மார்க்கங்களினூடாக இடம்பெறுகிறது. இதன்மூலம் குறிப்பிடத்தக்க அளவு வருமானம் கிடைப்பதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
