உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற போது நாட்டின் பாதுகாப்பு துறைகளில் தெளிவான வீழ்ச்சி காணப்பட்டதாக அப்போதய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று ஏற்றுக்கொண்டார். ரணில் விக்கிரமசிங்க ஆணைக்குழு முன்னிலையில் 2 வது நாளாக நேற்று சாட்சியமளித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் பல்வேறு குறைபாடுகள் காணக்கிடைத்ததனால் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பொறுப்பை அவ் வரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ரணில் விக்கிரமசிங்க சாட்சியளித்த போது தெரிவித்தார். இங்கு அரச மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு நாட்டின் பிரதமர் அழைக்கப்படுவது முக்கியம் வாய்ந்ததா என கேட்டபோது வழமையாக அழைக்கப்பட்டார் என பதிலளித்தார்.
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி பதவி வெற்றிடமானால் பாதுகாப்பு அமைச்சின் கடமைகளை செய்ய பிரதமர் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் பிரதமராக இருந்த போது நடைபெற்ற சகல பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்து கொண்டிர்களா என கேட்கப்பட்டபோது ஒரு சில சந்தர்ப்பங்களில் நான் கலந்துகொள்ளவில்லையென ரணில் விக்கிரம சிங்க பதிலளித்தார். ஏன் என்றால், முன்னரைப் போன்று பிரத்தியேக ஒரு நாள் காணப்படவில்லை. 24 மணி நேரத்திற்கு முன்னரே நாளை பாதுகாப்பு சபை கூட்டம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படும். அப்போது நாங்கள் முன்னர் ஒதுக்கியிருந்த பணிகளை மாற்றியமைப்பது சிரமமாகும்.
வாரத்தில் ஒரு தடவை பாதுகாப்பு சபை கூட்டம் நடாத்தப்படுவது முக்கியமாகும். எனது கீழிருந்த பொருளாதார குழுவை நாம் வாரந்தோறும் உரிய தினத்தில் நடாத்தினோம் எனினும் பாதுகாப்பு கவுன்சிலானது அவ்வாறு கூட்டப்படவில்லையென தெரிவித்தார்.
2018 ஒக்டோபர் 26 ம் திகதி முதல் 2019 ஏப்ரல் 29 திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற தினம் வரை ஏதேனும் காரணங்களின் பேரில் ஜனாதிபதி பாதுகாப்பு கவுன்சிலுக்கு அழைக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்வீர்களா என ஆணைக்குழு கேள்வி எழுப்பியது. ஆம் நான் ஏற்றுக்கொள்கிறேன் என ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார். 2018 ஒக்டோபர் 26 ம் திகதி முதல் டிசம்பர் 16 ம் திகதி வரை நான் பிரதமராக இருக்கவில்லை. 2019 ஜனவரி முதல் ஏப்ரல் வரை என்னை தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்கு அழைக்கவில்லையென தெரிவித்தார்.
உங்களுக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் நிலவியதா என ஆணைக்குழு கேட்டபோது அவ்வாறு பாரியளவில் கருத்து முரண்பாடுகள் இருக்கவில்லையென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி பொது வேட்பாளராக போட்டியிட்டே ஜனாதிபதி ஆனார். இதனால் பல்வேறு தரப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் மாற்று சிந்தனைகள் காணப்பட்டன. எந்தவொரு அரசாங்கத்திலும் பிரச்சினைகள் உண்டு. நாங்கள் அரசாங்கமாக முன்னோக்கி சென்றோம் என அவர் பதிலளித்தார். இராணுவ புலனாய்வு பணிப்பாளர் சபையின் பணிப்பாளராக மேஜர் ஜெனரால் சுரேஸ் சலே இருந்த காலத்தில் அவரினால் இஸ்லாமிய இனவாதம் குறித்து விளக்கமளித்த போது நீங்கள் தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தீர்களா என ஆணைக்குழு கேள்வி எழுப்பியது. அவரது அறிவு குறித்து எனக்கு பிரச்சினைகள் காணப்படவில்லை.
நான் இவ்வாறு கூறியதைப் போன்று பதில் வழங்கவும் இல்லை. எனினும் அவரது செயற்பாடுகள் குறித்து எனக்கு பிரச்சினைகள் காணப்பட்டன. நான் அவற்றை ஊடகங்கள் இன்றி கூறுகிறேன் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டு சாட்சிகள் பதியப்பட்டன.
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதிகள் சிவப்பு ஒலி வெளியிட்ட போது இவ் அழிவை தடுக்க ஏன் முடியாது போனதென ஆணைக்குழு கேள்வி எழுப்பியது, மாவனெல்லையில் புத்தர் சிலை உடைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிமின் இணைப்பு செயலாளர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது. கபீர் ஹாசிம் எனக்கு தனிப்பட்ட ரீதியில் கூறினார், இது குறித்து கண்டறியுமாறு, நான் பொலிஸ் மா அதிபரையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தையும் அழைத்து விசாரணை செய்யுமாறு ஆலோசனை விடுத்தேன்.
வனாத்தவில்லுவில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. காத்தான்குடியில் சஹ்ரான் ஒத்திகை மேற்கொண்டார். இவை அனைத்து விடயங்கள் ;குறித்தும் எமது புலனாய்வு பிரிவு பாதுகாப்பு பிரிவு முறையான விசாரணைகளை நடாத்தவில்லை. இவை அனைத்தும் இடம்பெற்ற போதும் சஹ்ரான் இருந்த இடத்தை கண்டறிய முடியவில்லையென ரணில் விக்கிரமசிங்க ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவும் ஆணைக்குழு முன்னிலையில் நேற்று ஆஜரானார்.
