fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிரேண்ட்பாஸ் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor மே 8, 2019 14:26

கிரேண்ட்பாஸ் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கிரேண்ட்பாஸ் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 12.2 கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர் மஹவத்தை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான நபரென தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை இன்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மே 8, 2019 14:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க