fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தடுப்பூசி கிடைக்கும் வரை எல்லைகளை திறக்கப்போவதில்லையென அவுஸ்திரேலியா அறிவிப்பு..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 18, 2021 12:41

சர்வதேச எல்லைகளை திறக்கப்போவதில்லையென அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. தமது நாட்டு சனத்தொகையில் பெரும்பான்மை மக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் வரை இந்த தீர்மானத்தை பின்பற்றவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கொரோனாவுக்கான பல தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் தமது நாட்டிற்கு பொருத்தமான தடுப்பூசி எதுவென்பது குறித்து ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வல்லரசு நாடுகளில் பயன்பாட்டிலுள்ள பைசர் தடுப்பூசியை தமது நாட்டில் இறக்குமதி செய்வது குறித்து அவுஸ்திரேலியா கவனம் செலுத்தியது. எனினும் குறித்த தடுப்பூசி ஏற்ப்பட்ட சிலர் மரணித்துள்ள சம்பவங்கள் நோர்வேயில் பதிவாகியதையடுத்து, அதனை தருவிப்பதற்கான குறித்து ஆலோசித்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொவிட் தொற்று பரவலை தடுப்பதில் அவுஸ்திரேலியா வெற்றிகண்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை 28 ஆயிரத்து 721 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 909 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 18, 2021 12:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க